வாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 08:05 pm
lowest-polling-percentage-registered-in-chennai-central-constituency

தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில், மாநிலத்திலேயே மிகக் குறைந்த வாக்கு சதவீதம், மத்திய சென்னை தொகுதியில் பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில், 38 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மதுரை தவிர மற்ற தொகுதிகளில், மாலை, 6:00 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. 

இன்னும் சில தொகுதிகளில், தாமதமாக வாக்குப் பதிவு துவங்கிய பூத்கள் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட பூத்களில் மட்டும், ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்குப் பதிவு நடைபெற்றது. 

இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, மாநிலத்தில் மாெத்தம், 69.55 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தேர்தல் கமிஷனர் சத்யப்பிரதா சாஹூ தெரிவித்தார். இந்நிலையில், மாநிலத்திலேயே மிகவும் குறைந்த பட்சமாக மத்திய சென்னையில், வெறும், 57 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. 

வட சென்னையில், 61.46 சதவீதம், தென் சென்னையில், 58.14 சதவீதம் மற்றும் மத்திய சென்னையில், 57.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திருவள்ளூரில், 70.36 சதவீதமும், ஸ்ரீபெரும்புதுாரில், 63.9 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 67.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதிகபட்சமாக நாமக்கல்லில், 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close