தேர்தலில் போட்டியிட தயார் : ரஜினி உறுதி !

  ராஜேஷ்.S   | Last Modified : 19 Apr, 2019 04:31 pm
i-will-come-to-politics-and-will-not-cheat-the-fans-actor-rajinikanth

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடைபெற்றாலும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ்கார்டனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினியிடம், "அடுத்த ஓட்டு ரஜினிக்குதான்" என்ற ஹாஸ்டேக் டிரெண்டிங் ஆனது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அப்போது நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் புரிகிறது; அவர்களை ஏமாற்றமாட்டேன்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடக்கிறதோ அப்போது அரசியலுக்கு வருவேன். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது  நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்" என்று ரஜினி கூறினார்.

மேலும், " மீண்டும் மோடி பிரதமராக வருவாரா? " என்ற கேள்விக்கு, மே 13 -ஆம் தேதி தெரிந்துவிடும் என்று பதில் அளித்த ரஜினிகாந்த், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை என்றும் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close