அமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன் !

  ராஜேஷ்.S   | Last Modified : 19 Apr, 2019 03:21 pm
ttv-dinakaran-became-the-general-secretary-of-ammk

அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளராக தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்; அமமுகவை தனிக் கட்சியாக பதிவு செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமமுக முறைப்படி அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும்விதமாக தற்போது, டிடிவி தினகரன் அமமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close