அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில், ழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் 20 -க்கும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதற்கும், அப்பாவி மக்கள் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " காவல் துறையின் அலட்சியத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு, இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மக்கள் அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் சுமூகமான முறையில் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும்" என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
newstm.in