மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 71.90% வாக்குகள் பதிவு

  ராஜேஷ்.S   | Last Modified : 19 Apr, 2019 07:15 pm
lok-sabha-election-71-90-of-votes-recorded-in-tamil-nadu

தமிழகத்தில் 38 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் 71.90% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு நிலவரம் குறித்து இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 38 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் 71.90% வாக்குகளும், அதிகபட்சமாக தருமபுரியில் 80.49%; குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.34% வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் நடைபெற்ற 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 75.56% வாக்குகளும், அதிகபட்சமாக சோளிங்கரில் 82.26%, குறைந்தபட்சமாக பெரம்பூரில் 64.14% வாக்குகளும் பதிவாகியுள்ளன என்றும் இறுதி பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close