'தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்' - பொன்பரப்பி வன்முறை குறித்து கமல் ட்வீட்!

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 12:59 pm
kamal-tweet-about-ponparappi-riot

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி வன்முறை சம்பவம், 'தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் சின்னமான 'பானை' -யை உடைத்ததன் மூலம் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நேற்று இரு தரப்பினரிடையே மோதல் உண்டானது. பொன்பரப்பியில் 20க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், இதில், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 

இதையடுத்து, இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close