இவிஎம் அறைக்குள் நுழைந்த வட்டாச்சியரிடம் விசாரணை !

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 08:48 am
madurai-collector-report-to-ceo

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் வட்டாச்சியர்  நுழைந்தது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தின் அறைக்குள் பெண்  ஒருவர் நேற்றிரவு நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைக் கண்டித்து அத்தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர், வாக்கு எண்ணும் மையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் புகாரும் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் நுழைந்தது பெண் வட்டாச்சியர் சம்பூர்ணம் என்பது தெரிய வந்துள்ளது.  

அவரிடம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணை குறித்தும், மதுரை தொகுதி வேட்பாளர்கள் அளித்த புகாரின் மீது  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹூவுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிக்கை அனுப்பியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close