4 தொகுதிகளுக்கு இன்று விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 11:01 am
admk-distributes-application-for-byelection

தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறவுள்ளதையடுத்து, இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் இன்று விருப்பமான விநியோகம் செய்யப்படுகிறது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரு,ம் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வருகிற மே 19 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 4 தொகுதிகளில்  போட்டியிட விரும்புபவர்கள்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ரூ.25,000 செலுத்தி விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு விநியோகிக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close