அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
வரும் மே 19-ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 29-ம் தேதி முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் தேதியும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி மே மாதம் 2-ம் தேதியுமம் ஆகும். மே 2ஆம் தேதி மாலை, நான்கு சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த நான்கு தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.