4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

  ராஜேஷ்.S   | Last Modified : 22 Apr, 2019 06:16 pm
aiadmk-election-appointments-are-appointed

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக தலைமைக் கழகம் இன்று நியமித்துள்ளது.

4 தொகுதிகளில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பணியாற்றுவர் என்று அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், நீலகிரி, நாகை, விழுப்புரம், திருவள்ளூர், பெரம்பலூர், தென்சென்னை வடக்கு உள்ளிட்ட  நிர்வாகிகள் சூலூரிலும், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, தென்சென்னை நிர்வாகிகள் அரவக்குறிச்சியிலும், மதுரை, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கடலூர், சிவகங்கை, தஞ்சை நிர்வாகிகள் திருப்பரங்குன்றத்திலும், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திருவாரூர், நெல்லை, குமரி, ராமநாதபுரம், அரியலூர் நிர்வாகிகள் ஒட்டப்பிடாரத்திலும் பணிபுரிவார்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 19-ம் தேதி  நடைபெறுகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close