ஏப். 27, 28 - இல் வேட்புமனுக்களை பெறக்கூடாது: தேர்தல் அதிகாரி உத்தரவு

  ராஜேஷ்.S   | Last Modified : 25 Apr, 2019 09:12 pm
do-not-get-nominations-on-april-27-and-28

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் ஏப்ரல் 27 மற்றும் 28 -ஆம் தேதிகளில் வேட்புமனுக்களை பெறக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 27-ஆம் தேதி, வங்கிகளுக்கு விடுமுறை என்பதாலும் (4-ஆவது சனிக்கிழமை), 28 -ஆம் தேதி ஞாயிறுக்கிழமை வார விடுமுறை என்பதாலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே 19 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close