ஒரு உறையில் 3, 4 கத்திகள் இருந்தால் பிரச்னைதான்: தங்க தமிழ்செல்வன்

  ராஜேஷ்.S   | Last Modified : 29 Apr, 2019 05:38 pm
if-there-are-3-4-knives-in-a-back-cover-the-problem-is

ஒரு உறையில் ஒரு கத்தி மட்டுமே இருக்க வேண்டும்; 3, 4 கத்திகள் இருந்தால் பிரச்னைதான் என்று, அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன், ‘அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது அமைச்சர்கள் வராதது ஒற்றுமை இல்லை என தெரிகிறது. ஒரு உறையில் ஒரு கத்தி மட்டுமே இருக்க வேண்டும்; 3, 4 கத்திகள் இருந்தால் பிரச்னைதான். புதிய தலைமையை மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள்; பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை, ஊழல் இல்லாத ஆட்சியை அமமுக கொடுக்கும்’ என்று பேசியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close