ஸ்டாலின் சொல்லும் "3சி" அவருக்கே பொருந்தும் : முதல்வர் பழனிசாமி

  ராஜேஷ்.S   | Last Modified : 01 May, 2019 08:20 pm
he-can-not-succeed-in-his-son-duraimurugan

ஸ்டாலின் சொல்லும் collection, corruption, commission அவருக்கே பொருந்தும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சூலூர் தொகுதிக்குட்பட்ட ஜல்லிபட்டியில், அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘சூலூர் சட்டமன்ற தொகுதியின் சுல்தான்பேட்டை அதிமுகவின் கோட்டையாக உள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாத வகையில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மனிதனுக்கு எப்படி உயிர் முக்கியமோ; அதேபோல் விவசாயத்திற்கு நீர் முக்கியம். அதிமுகவையும், திமுகவையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; எந்தக் கட்சி மக்களுக்கானது என்பது தெரியும்’ என்றார் முதல்வர்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, ‘ஸ்டாலின் சொல்லும் collection, corruption, commission அவருக்கே பொருந்தும். வருமான வரித்துறையினர் துரைமுருகன் வீட்டில் பல கோடி ரூபாயை கைப்பற்றினர். 8 ஆண்டு ஆட்சியில் இல்லாதபோதே அவர்களிடத்தில் இவ்வளவு பணம் இருக்கிறது. தன் மகனையே வெற்றிபெற வைக்க முடியாத துரைமுருகன், 25 நாட்களில் ஆட்சி மாற்றம் எனச் சொல்கிறார்’ எனக் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close