தேர்தலுக்கு பிறகு முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்து விடுவார் : தினகரன்

  ராஜேஷ்.S   | Last Modified : 01 May, 2019 08:26 pm
chief-minister-palanisamy-will-resign-after-the-election-dinakaran

சபாநாயருக்கு எதிராக, சட்டப்பேரவையில் திமுக கொண்டு வரவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் எங்களுக்கு ஆதரவாக இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், மதுரையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, "திமுக கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் எங்களுக்கு ஆதரவாக இல்லை. கொறடா மனு அளித்தபோதே சபாநாயகருக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். 3 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தூண்டுவது போல் திமுக செயல்படுகிறது. அரசு ஒப்பந்தங்களில் முதல்வரும், திமுகவும் கூட்டாக உள்ளனர்’ என்று குற்றம் சாட்டினார்.

மேலும், "தேர்தலுக்கு பிறகு முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்து விடுவார். சசிகலா வழக்கு நிலுவையில் உள்ளதால் 3 எம்எல்ஏக்களும் எங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதில் தவறில்லை. அதிமுக கொடியுடன் காவி வண்ணத்தையும், தாமரையையும் சேர்த்து கொண்டால் பொருத்தமாக இருக்கும். 22 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்" என்று தினகரன் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close