3 எம்.எல்.ஏக்களுக்கும் சென்ற சேர்ந்த சபாநாயகரின் நோட்டீஸ்

  ராஜேஷ்.S   | Last Modified : 02 May, 2019 05:22 pm
notice-of-the-speaker-who-attended-the-3-mlas

அரசு கொறடா புகாரின் பேரில் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ், இன் று அவர்களுக்கு சென்று சேர்ந்தது. 

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அரசு கொறடா ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கக் கோரி சபாநாயகர் தனபால், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி  3 எம்எல்ஏக்களுக்கு  நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், அந்த நோட்டீஸ்  3 எம்எல்ஏக்களுக்கும் இன்று  சென்று சேர்ந்தது. நோட்டீஸ் கையில் கிடைத்தது முதல் 7 நாட்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரட்டை இலை வழக்கு உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட்டு அனுப்பப்பட்ட 185 பக்க நோட்டீஸில், தினகரனுடன் 3 பேர் இருக்கும் புகைப்படங்களையும் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close