ஸ்டாலின் மீது பாஜக இளைஞரணி புகார்

  Newstm Desk   | Last Modified : 03 May, 2019 08:48 pm
bharatiya-janata-yuva-morcha-has-given-a-complaint-to-the-ceo-of-tamil-nadu-over-dmk-chief-m-k-stalin

திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் மீது, பாரதிய ஜனதா யுவ மோட்சா அமைப்பினர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.

நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இப்பிரச்சாரத்தின்போது அவர், "ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படியே அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது" எனப் பேசினார்.

இதையடுத்து, பிரதமர் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ள ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜகவின் இளைஞரணியான பாரதிய ஜனதா யுவ மோட்சாவின் நிர்வாகிகள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹுவிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close