22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 04 May, 2019 04:56 pm
mk-stalin-at-thirupparangundram

தமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார். 

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வருகிற மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருப்பரங்குன்றத்தில் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் கிராம மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. நடந்து முடிந்த 18 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நடக்க உள்ள நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகிய 22 தொகுதிகளிலும் திமுக மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்க நான் மீண்டும் நான் இங்கு வருவேன்" என்று பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close