தானே புயலின் போது பிரதமர் தமிழகத்திற்கு வந்தாரா? - தமிழிசையின் கேள்விக்கு கே.எஸ்.அழகிரி பதில்!

  முத்துமாரி   | Last Modified : 04 May, 2019 06:19 pm
ks-alagiri-replied-to-tamilisai-soundararajan

தானே புயலின் போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தமிழகம் வந்து பார்வையிட்டாரா? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கே.எஸ்.அழகிரி பதில் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தானே புயலின் போது, புயல் வந்த 48 மணி நேரத்திற்குள் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடலூர் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டார். புயல் ஏற்பட்டால் பிரதமரோ அல்லது முக்கிய அமைச்சர்களோ நேரில் வந்து பார்வையிடுவது வழக்கமாக இருந்தது. 

ஆனால், கஜா புயலின் போது, தமிழகத்தில் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கோ வந்து பார்வையிடவில்லை. தமிழக அரசு கேட்ட நிவாரணத்தொகையை வழங்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 

— KS_Alagiri (@KS_Alagiri) May 4, 2019

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close