ஆட்சி கவிழுமா என ஜோசியம் பார்க்கின்றனர்: ஓபிஎஸ்

  ராஜேஷ்.S   | Last Modified : 05 May, 2019 09:35 pm
will-the-regime-fall-ops

ஆட்சி கவிழ்ந்துவிடுமா என ஜோதிடம் பார்த்து வருகின்றனர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பன்னீர்செல்வம் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘தொடர்ச்சியாக நலத்திட்டங்களை வழங்கி வருவதால் திமுக பொறாமை கொண்டுள்ளது. ஆட்சி கவிழ்ந்துவிடுமா என ஜோதிடம் பார்த்து வருகின்றனர்’ என்றார்.

மேலும், 2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும், அதிமுக ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு ஈர்த்தனன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close