தினகரன், ஸ்டாலின் இடையே ரகசிய கூட்டணி : பொன்.ராதாகிருஷ்ணன்

  முத்து   | Last Modified : 07 May, 2019 06:18 pm
dinakaran-and-stalin-are-a-and-b-tee-pon-radha-krishnan

திமுகவும், அமமுகவும் ஒன்றாக உள்ளன; இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘தினகரனும், ஸ்டாலினும் ஏ,பி டீமாக உள்ளனர். திமுகவும், அமமுகவும் ஒன்றாக உள்ளன; இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. திமுகவும், அமமுகவும் திரைக்கு பின்னால் இருக்கக்கூடிய கூட்டணி; அதிமுக - பாஜக வெளிப்படையான கூட்டணி’ என்றார்.

மேலும், 4 தொகுதி இடைத்தேர்தலிலும், பாஜகவின் முழு ஆதரவு அதிமுகவிற்கு உள்ளது என்ற அமைச்சர், கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ் மாணவர்களுக்கு முதல் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close