"வானிலை மையம் மழையை வரவழைக்க அல்ல" - கி.வீரமணிக்கு தமிழிசை பதிலடி!

  முத்துமாரி   | Last Modified : 10 May, 2019 10:23 am
tamilisai-tweet-for-k-veeramani

"வானிலை மாற்றத்தை கணித்து கண்காணித்து சொல்லவே வானிலை ஆய்வு மையம்; மழை வரவழைக்க அல்ல" என்று கி.வீரமணிக்கு பதிலளிக்கும் விதமாக தமிழிசை ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வேண்டி கோவில்கள் அனைத்திலும் சிறப்பு பூஜை செய்ய இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படியே பல்வேறு கோவில்களில் அர்ச்சகர்கள் பூஜை செய்து வருகின்றனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளானது. 

அதேபோன்று, பூஜைகள் செய்தால் மழை வரும் என்றால், வானிலை ஆய்வு மையம் எதற்கு? என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். கி.வீரமணியின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இதைதொடர்ந்து, பாரத ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில், "பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு முதலில் தேவை அடிப்படை அறிவு? வானிலை ஆய்வு மையம் வானிலை மாற்றத்தை கணித்து கண்காணித்து சொல்லவே !மழை வரவழைக்க அல்ல!" என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close