பாஜகவுடன் த.மா.கா இணைவதாக வரும் செய்தி உண்மையில்லை: ஜி.கே.வாசன் பதில்!

  முத்துமாரி   | Last Modified : 10 May, 2019 01:10 pm
gk-vasan-replied-to-ks-alagiri

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே, கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டுள்ளதாகவும், பாஜகவுடன் த.மா.கா இணைவதாக வரும் செய்தி உண்மையில்லை என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். 

கருத்து வேறுபாடு காரணமாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்ற தொண்டர்கள், மீண்டும் காங்கிரசில் இணைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மா.காவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக பதில் அளித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜவுடன் இணையவுள்ளது என்று வெளியான தகவல் வடிகட்டிய பொய். த.மா.கா தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டுள்ளார். 

பத்திரிகைகளும், ஊடகங்களும் வேறு செய்திகள் இல்லை என்பதால் இது போன்ற செய்திகளை வெளியிடுகின்றனர் என்று நினைக்கிறேன். எனவே, த.மா.காவை பாஜகவுடன் இணைப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை. த.மா.காவின் வளர்ச்சியை பொறுக்காமல் சதி செய்கின்றனர்" என்று பதில் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close