மே 23க்கு பிறகு ரஜினியின் அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு! - சத்யநாராயணராவ்

  முத்துமாரி   | Last Modified : 11 May, 2019 02:08 pm
rajinikanth-s-important-announcement-after-may-23

மே 23ம் தேதிக்கு பிறகு அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று அவருடைய சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார். 

இன்று திருச்சியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். அவர் அரசியலுக்கு வருவதில் தாமதிப்பது நல்லதுக்கு தான். விரைவில் வருவார். 

மே 23 பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்.

ரஜினியின் ரசிகர்கள் அவரது பெற்றோருக்காக கட்டியிருக்கும் நினைவு மண்டப திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினி வருவார். அப்போது ரசிகர்களை சந்தித்து பேசுவார்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close