புதுச்சேரி வெங்கட்டா நகரில் 44% வாக்குகள் பதிவு!

  முத்துமாரி   | Last Modified : 12 May, 2019 03:45 pm
puducherry-venkata-nagar-repoll

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டா நகரில் உள்ள வாக்குசாவடி எண் 10- இல் இன்று (மே 12) மறுவாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு மாலை 3 மணி நிலவரப்படி 44% வாக்குகள் பதிவாகியுள்ளது. 

முன்னதாக, இன்று காலை 11 மணி நிலவரப்படி 25% வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 34% வாக்குகளும் பதிவாகியிருந்தது. 

மேலும் மறுவாக்குபதிவையொட்டி, பணப்பட்டுவாடா மற்றும் அசம்பாவிதங்களை தடுக்க புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close