ஐ.எஸ். அமைப்பிடம் பணம் வாங்கி விட்டாரா கமல்ஹாசன்?

  ராஜேஷ்.S   | Last Modified : 14 May, 2019 03:36 pm
kamal-haasan-got-money-from-the-is-organization

’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் கமல் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய கருத்தை திரும்ப பெறுகிறேன்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘ஐ.எஸ். அமைப்பிடம் பணம் வாங்கி விட்டாரா கமல்ஹாசன்?, அவரின் பின்னணியில் இருப்பது யார் என விசாரிக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது; எனவே ஒரு மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு. இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதை கமல் வேலையாக வைத்துள்ளார். என்ன வேண்டுமானாலும் சொல்வதற்கு கமல்ஹாசன் என்ன ஜனாதிபதியா? கவர்னரா?’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். கமலின்  நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்ற தொனியில் தான் பேசினேன். மன்னிப்பு கேட்டால் கமல் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய கருத்தை திரும்ப பெறுகிறேன். கமல் சொன்னதை சரி என்று சொன்ன கே.எஸ். அழகிரி இந்தியாவில் இருக்க தகுதியற்றவர்; அவர் இத்தாலிக்குத்தான் செல்ல வேண்டும்’ என்றார்.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close