ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்: புகழேந்தி ஆவேசம்!

  முத்துமாரி   | Last Modified : 14 May, 2019 03:54 pm
ammk-executive-replied-for-rajendra-balaji

கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்று அமமுக பிரமுகர் புகழேந்தி கூறியுள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி புகழேந்தி, "கமலின் கருத்து தவறு என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால், அதற்காக கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி கூறியது கண்டிக்கத்தக்கது. அவரை கைது செய்ய வேண்டும். 

ஸ்டாலின் - சந்திரசேகர் ராவ் சந்திப்பை குழப்பமானதாகவே நாங்கள் கருதுகிறோம்" என்று கூறியுள்ளார். 

கமலின் சர்ச்சை பேச்சு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அரவக்குறிச்சியில் அக்கட்சியின் வேட்பாளர் மோகன் ராஜை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் தான் நாதுராம் கோட்ஸே என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். மேலும், தேர்தலுக்காக பேசவில்லை. மக்களின் சார்பில் காந்தியின் கொலைக்கு நியாயம் கேட்கிறேன் என்று பேசினார். 

கமல் இவ்வாறு பேசியதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ராஜேந்திர பாலாஜி பதில் சர்ச்சை கருத்து

இந்திய இறையாண்மையாக்கு எதிராக பேசிய கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் கமல் வாயிலிருந்து வருவதெல்லாம் விஷமாக அல்லவா இருக்கிறது என்று ராஜேந்திர பாலாஜி கடும் வார்த்தைகள் கூறியிருந்தார்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close