ஹிந்து குறித்த சர்ச்சை பேச்சு : கமல் மீது வழக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 14 May, 2019 07:49 pm
case-registered-against-kamal-hassan

ஹிந்து குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது அவரக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 19 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகளில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியும் ஒன்று. இதையொட்டி இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், கமல்ஹாசன் நேற்று  பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து" எனப் பேசினார். அவரது இந்தக் கருத்து, அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக  இந்து முன்னணி பிரமுகர் ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தின் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதத்தில் பேசியது, குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிராக அவதூறு பரப்பியது என இரு பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜாதி, மத, இன ரீதியாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையிலும் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close