நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்: முதல்வர் உறுதி

  முத்து   | Last Modified : 14 May, 2019 10:30 pm
weavers-home-loan-will-be-dismissed-chief-minister-confirmed

நெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தில், விசைத்தறியாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். 

கோவை சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "நெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தில் விசைத்தறியாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் மார்ச் 31, 2017க்கு முன் பெற்ற கடன் ரூ.65 கோடி தள்ளுபடி செய்யப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 250யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் தரும் மாநிலம் தமிழகம்’ என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close