இவிஎம் இயந்திரங்கள் தேனிக்கு மீண்டும் இடமாற்றம்?

  Newstm Desk   | Last Modified : 15 May, 2019 10:13 pm
evm-transferred-from-thiruvallur-to-theni

தேனி மக்களவைத் தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மீண்டும் இடமாற்றம் செய்யப்படுவது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஏற்கெனவே கோவையிலிருந்து இவிஎம் இயந்திரங்கள் தேனிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று, திருவள்ளூரில் இருந்து 30 இவிஎம் இயந்திரங்களும், 30 விவிபாட் கருவிகளும் தேனிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டும் தானே மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது? அதற்கு ஏன் இவ்வளவு இவிஎம்  இயந்திரங்கள்?" என கேள்வியெழுப்பியுள்ள தங்க தமிழ்ச்செல்வன், இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close