கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஹெச்.ராஜா

  முத்து   | Last Modified : 16 May, 2019 08:42 pm
kamal-haasan-apologizes-h-raja

"சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி" என்கிற பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், மதுரை கரிமேட்டில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என சொல்லும் கமல், சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற நவகாளி கலவரத்தை கலவரம் அல்ல என கூறுகிறாரா? கலவரத்தை உண்டாக்கும் எண்ணத்துடன் கமல் பேசி உள்ளார். கமல் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் பேசுவதற்கு என்ன காரணம். கமல் ஒரு இந்து விரோதி. திரைப்படத்தில்கூட இந்து கொள்கைக்கு எதிராக பேசி உள்ளார். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close