கமலின் சினிமாவிலும், அரசியலிலும் கண்ணியம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

  முத்து   | Last Modified : 16 May, 2019 08:52 pm
rajinikanth-comes-to-the-admk-it-is-good-minister-jayakumar

கமலின் திரைப்படத்திலும் கண்ணியம் இல்லை; அரசியலிலும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், ‘கமல் கூறிய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. எம்ஜிஆர் படங்களிலும் கண்ணியம், கோட்பாடு என அனைத்தும் இருந்தது. அதேபோல் அரசியலும் இருந்தது. கமலைப் பொறுத்தவரை திரைப்படத்திலும் கண்ணியம் இல்லை. அரசியலிலும் இல்லை. இந்த மாதிரி வார்த்தைகளை கூறும்போது வாங்கி கட்டி கொண்டுதான் இருக்க வேண்டும். தான் பேசியது தவறுதான் என்று கூறும்போது தான் அனைவரும் சிறந்த மனப்பான்மையோடு ஏற்றுக் கொள்வார்கள்.

அதிமுக என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. திமுக கூட்டணி என்பது காகித ஓடம். வருகிற 23ம் தேதி காங்கிரஸ், திமுக, அமமுக, காகித ஓடநிலைமைக்கு வரும்.

ரஜினிகாந்த் வேண்டாத மனிதர் அல்ல. எல்லோருக்கும் வேண்டியவர்தான். அவர் அதிமுகவிற்கு வந்தால் நல்லது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close