கமல் பிரச்சார கூட்டத்தில் முட்டை வீச்சு : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 17 May, 2019 08:27 am
voilence-in-kamal-public-meeting-case-filed-on-bjp-worker

கமலின் பிரச்சாரக் கூட்டத்தில்  முட்டை, கல் வீசியது தொடர்பாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரூரில் நேற்றிரவு பிரச்சார மேற்கொண்டார். அப்போது, பிரச்சார கூட்டத்தில் முட்டைகள், கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் முட்டை, கற்கள் வீசிய நபரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், கரூர் ஒன்றிய பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, வேலாயுதம்பாளையம் போலீஸார் அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close