வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா மூலம் கண்காணிப்பு

  முத்து   | Last Modified : 18 May, 2019 05:06 pm
watching-video-cameras-on-polling-stations

தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா மூலம் மறுவாக்குப்பதிவு கண்காணிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

விவிபேட் மற்றும் இ.வி.எம் மெஷின் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 13 வாக்குச்சாவடிகளில்  நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா மூலம் மறுவாக்குப்பதிவு கண்காணிக்கப்படும் என்றும், வாக்குச்சாவடிகளை சுற்றி 200 மீட்டர் தொலைவில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், ’மத்திய தொழிற் பாதுகாப்புப் படை, சிறப்பு காவல்படை என மொத்தம் 566 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றார் ஆட்சியர்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close