அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக புகார்!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 11:45 am
admk-complaints-against-aravakurichi-dmk-candidate

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று(மே 19) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், விவிபேட் மற்றும் இ.வி.எம் மெஷின் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் காலை முதலே ஒரே பரபரப்பாக இருந்து வருகிறது. தொடர்ந்து செந்தில் பாலாஜி, தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்காளர்களை அடைத்து வைத்து, வாக்களிக்க விடாமல் தடுத்து வருவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் புகார் அளித்துள்ளார். 

அதேபோன்று ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது என திமுக சார்பிலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close