12-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: மாஃபா பாண்டியராஜன்

  ராஜேஷ்.S   | Last Modified : 19 May, 2019 10:14 pm
aiadmk-will-win-in-12-seats-mafa-pandiarajan

12-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில், இந்த கருத்துக்கணிப்பு குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், ‘12-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம். பாஜக கூட்டணி இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்த தமிழகத்தில் அமைந்த அதிமுக கூட்டணியும் ஒருகாரணம். 22 தொகுதி இடைத்தேர்தல்களில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவோம்’ என்றார்.

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

newstm.in  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close