மீண்டும் பாஜக ஆட்சியே: தமிழிசை சௌந்தரராஜன்

  Newstm Desk   | Last Modified : 20 May, 2019 07:18 pm
bjp-rule-again-tamilisai-soundararjan

மத்தியில் பாஜக ஆட்சியே மீண்டும் அமையும் என தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகர் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘கருத்துகணிப்புகள் பின்னால் பாஜக இருக்கிறது என்று எதிர்கட்சிகள் கூறுவது ஏற்க முடியாது. மோடியின் திட்டங்கள் தொடர வேண்டும். மத்தியில் ஆட்சி அமைக்க போவது பாஜக தான். பாஜக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்’ என்றார்.

மேலும், ‘காங்கிரஸ் மட்டும் தான் கூட்டம் நடத்த பலத்த யோசனை செய்துவருகிறது. சுயநலத்துடன் பிரிவினை கருத்துகளை யாரும் கூற வேண்டாம். தமிழகத்தில் மாறுபட்ட அரசியல் சூழல் இருப்பதால் தமிழக கருத்து கணிப்பை ஏற்க முடியாது. தமிழகத்தில் அதிகளவு இடங்களை அதிமுக கூட்டணி பெறும். விவசாயிகள் பாதிக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் நிலை’ என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close