நாளை மறுநாள் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்: தேர்தல் ஆணையம்

  Newstm Desk   | Last Modified : 21 May, 2019 08:04 pm
the-counting-of-votes-will-start-at-8-pm-tomorrow-election-commission

நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 30 நிமிடத்திற்கு பின் மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை தொடங்கும். தபால் வாக்கு எண்ணும் பணி நிறைவுக்காக காத்திராமல் மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை பணி முடிந்த பின்னர் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். அதிகபட்சமாக திருவள்ளூர் (தனி) தொகுதியில் 34 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது’ என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

 

    newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close