அமித் ஷா விருந்து : முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு!

  முத்து   | Last Modified : 21 May, 2019 09:31 pm
chief-minister-and-deputy-chief-minister-attend-bjp-party

பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்றிரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான அசோகாவில் நடைபெற்ற இந்த விருந்தில். தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் விருந்தில் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்த முதல்வரும், துணை முதல்வரும் அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் மரியாதை செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close