தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர்கள் இவர்கள் தான்!

  Newstm Desk   | Last Modified : 22 May, 2019 05:13 pm
exit-poll-result-for-tamil-nadu-constituency-wise-exclusive

நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ள, 17வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், தமிழகத்தில், வேலுார் தவிர, 38 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், எந்தக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் நாம் வெளியிட்டுள்ளோம். 

பிரபல அரசியல் நிபுணரும், தேர்தல் கள ஆய்வாளருமான நாகராஜன், நியூஸ்டிஎம் நிறுவத்திற்காக பிரத்யேகமாக நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. 

தமிழகத்தில் உள்ள முக்கிய தொகுதிகளில், வி.ஐ.பி.,வேட்பாளர்களின் தலையெழுத்து, நம் கணிப்பை ஒட்டியே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியானதும், நேயர்கள் நம் கருத்து கணிப்பு முடிவுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். 

அரசியல் கட்சி வாரியாக அதிமுக - 12, அதன் கூட்டணி கட்சிகளான பாஜக - 3, பாமக - 2 இடங்களிலும் வெற்றியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், திமுக - 15 அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் - 4, விசிக - 1, சிபிஐ - 1 இடங்களில் வெற்றி பெறலாம் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

 

தொகுதி

 

கட்சி வெற்றி பெறும் வேட்பா ளர் 
திருவள்ளூர்  அதிமுக வேணுகோபால்
வட சென்னை திமுக கலாநிதி வீராசாமி
தென் சென்னை  அதிமுக ஜெயவர்த்தன்
மத்திய சென்னை  திமுக தயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்புதுார் திமுக டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் திமுக செல்வம்
அரக்கோணம்   திமுக ஜெகத்ரட்சகன்
வேலுார் - தேர்தல் ஒத்திவைப்பு
 
   
கிருஷ்ணகிரி அதிமுக கே.பி.முனுசாமி
தர்மபுரி  பாமக அன்புமணி ராமதாஸ்
திருவண்ணாமலை  திமுக அண்ணாதுரை
ஆரணி  காங்., விஷ்ணு பிரசாத்
விழுப்புரம்  பாமக வடிவேல் ராவணன்
கள்ளக்குறிச்சி  திமுக கௌதம் சிகாமணி
சேலம்  அதிமுக கே.ஆர்.எஸ்.சரவணன்
நாமக்கல்  அதிமுக காளியப்பன்
ஈராேடு  திமுக கணேசமூர்த்தி
திருப்பூர்    அதிமுக எம்.எஸ்.எம்.ஆனந்த்
நீலகிரி  திமுக ஆ.ராசா
கோயம்புத்துார்  பாஜக சி.பி.ராதாகிருஷ்ணன்
பொள்ளாச்சி  அதிமுக சி.மகேந்திரன்
திண்டுக்கல்  திமுக வேலுச்சாமி
கரூர்  அதிமுக தம்பித்துரை
திருச்சி காங்., திருநாவுக்கரசர்
பெரம்பலுார்  அதிமுக என்.ஆர்.சிவபதி
கடலுார்  திமுக ஸ்ரீரமேஷ்
சிதம்பரம்  விசிக திருமாவளவன்
மயிலாடுதுறை  திமுக ராமலிங்கம்
நாகப்பட்டினம்  சிபிஐ செல்வராசு
தஞ்சாவூர்  திமுக பழனிமாணிக்கம்
சிவகங்கை  காங்., கார்த்தி சிதம்பரம்
மதுரை  அதிமுக வி.வி.ஆர்.ராஜ்சத்யன்
தேனி அதிமுக ரவீந்திரநாத் குமார்
விருதுநகர்  காங்., மாணிக் தாகூர்
ராமநாதபுரம்  பாஜக நயினார் நாகேந்திரன்
துாத்துக்குடி  திமுக கனிமொழி
தென்காசி  திமுக தனுஷ் குமார்
திருநெல்வேலி  அதிமுக மனோஜ் பாண்டியன்

கன்னியாகுமரி

பாஜக பொன்.ராதாகிருஷ்ணன்


newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close