மக்களவை தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த அ.தி.மு.க., 

  விசேஷா   | Last Modified : 24 May, 2019 01:20 pm
vote-share-percentage-in-tamilnadu

மக்களவை தேர்தலில், தமிழகத்தில் ஆளும் அதிமுக தன் வழக்கமான வாக்கு வங்கி சதவீதத்தில் இருந்து, 12 முதல் 17 சதவீதத்தை இழந்துள்ளது. திமுகவின் வாக்கு வங்கியில் பெரிய அளவு மாற்றம் ஏற்படாவிட்டாலும், அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில், ஆளும் அதிமுக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான திமுக 23 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சி.பி.ஐ., - சி.பி.எம்., - விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லீம் லீக் என அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து, திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், திமுகவின் வாக்கு வங்கி சராசரியாக, 28 - 32 சதவீதம் வரை இருக்கும். இந்த தேர்தலிலும் அந்த கட்சி, 32.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதே சமயம், வழக்கமாக, 30 - 35 சதவீத வாக்கு வங்கியை பெற்றிருக்கும் அதிமுக இந்த தேர்தலில், 18.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு, 12 முதல் 17 சதவீத வாக்கு வங்கி சரிந்துள்ளது. 

அதே சமயம், சராசரியாக 5 - 6 சதவீத வாக்கு வங்கியை பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில், 12 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 2.43 சதவீத வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2.40 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லீம் லீக் கட்சிக்கு 1.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, எப்போதும் போல், அதன் வாக்கு வங்கி சரியாமல் பார்த்துக் கொண்டுள்ளது. அந்த கட்சிக்கு இந்த தேர்தலில், 5.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த, பாரதிய ஜனதாக கட்சிக்கு, 3.6 சதவீத வாக்குகளும், தேமுதிகவுக்கு, 2.1 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 

தேமுதிகவுக்கும் இந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் உள்ளிட்டவை சேர்ந்து, 17 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. யாருக்கம் வாக்களிக்க விரும்பவில்லை எனும் நோட்டாவுக்கு, 1.28 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close