மக்கள் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - ஓபிஎஸ்

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 01:50 pm
ops-press-meet

17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 

இது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதப் பிரதமர் மோடி பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் தீர்ப்பு வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close