தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக 45 சதவீத வாக்குகளையும், 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அதிமுக 38 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
தமிழத்தில் காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மே 19ல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. ஆளுங்கட்சியான அதிமுக 9 இடங்களிலும், எதிர்க்கட்சியான திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த இரண்டு கட்சிகளும் நேரடியாக போட்டியிட்ட இந்த இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு, 38 சதவீத வாக்குகளும், திமுகவுக்கு, 45 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. நோட்டாவுக்கு ஒரு சதவீதமும், சுயேட்சை உட்பட பிறகட்சிகளுக்கு, 15 சதவீத வாக்குகுளும் கிடைத்துள்ளன.
newstm.in