தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல்?

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 11:03 am
h-vasanthakumar-resigns-mla-position

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளதையடுத்து தமிழகத்தில் ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாகிறது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். அவர் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை 2,60,029 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

இந்நிலையில், வசந்தகுமார் எம்.பியாக பதவியேற்க உள்ளதால், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவர் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

அவர் எம்.எல்.ஏ பதவியை விரைவில் ராஜினாமா செய்யப் போவதாகவும் இன்று கூறியுள்ளார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் ஒரு இடம் காலியாக உள்ளது. எனவே, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சட்டப்பேரவை நிலவரம்:

மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக 113 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 97 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் உள்ளனர்.

தற்போது நடந்து முடிந்த 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில், திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதன. இதன்மூலம் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 122 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட அதிமுக அதிகமாக பெற்றுள்ளதால், ஆட்சிக்கு பாதகம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close