எனக்கு அந்த கனவு இல்லை: ஓபிஎஸ் மகன்

  ராஜேஷ்.S   | Last Modified : 24 May, 2019 10:10 pm
i-do-not-have-that-dream-ops-s-son-interviewed

மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவு தனக்கு இல்லை என்று, தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற   துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவீந்திரநாத் குமார், ‘ மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவு எனக்கு இல்லை. தேனி தொகுதியில் குடிநீர் பிரச்னையை முழுவதுமாக தீர்க்க பாடுபடுவேன்’ என்றார்.

முன்னதாக, பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி தருவது பற்றி பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close