பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் எம்.பிக்கள் மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 10:57 am
stalin-pays-his-tributes-to-kalaignar-memorial

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் மரியாதை செலுத்தினர். 

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் புதுச்சேரி சேர்த்து மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பிக்கள், சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலையில் இருந்து பேரணியாக சென்று கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

அதேபோன்று அனைவரும் அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பெரியார் திடலில் உள்ள  பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.

ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் அன்று தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close