திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 08:29 pm
trbalu-selected-dmk-leader-of-the-lok-sabha

திமுக மக்களவை குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும், குழு துணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக மக்களவை குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவும், குழு துணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக மக்களவை கொறடாவாக ஆ.ராசாவும், மக்களவை பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், திமுக மாநிலங்களவை குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவும்,  மாநிலங்களவை கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.


newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close