"தம்பிகளே வாரீர்...தாய்வீடு அழைக்குது.." - பிரிந்தவர்களுக்கு அதிமுக அழைப்பு!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 02:05 pm
admk-invites-their-old-members

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அக்கட்சியில் வந்து சேருமாறு அதிமுக தலைமை, நமது அம்மா நாளிதழ் மூலமாக அழைப்பு விடுத்துள்ளது.

"தம்பிகளே வாரீர்...தாய்வீடு அழைக்குது.." என்ற தலைப்பில் இன்றைய நமது அம்மா நாளிதழில் என்று ஒரு கவிதை இடம்பெற்றுள்ளது. அதன்மூலம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் வந்து சேருமாறு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதில், "கூடாத இடம் சேர்ந்த கர்ணனை நினைத்து பார்; தர்மவழியில் நடக்கும் தாய்க்கழகம் அழைக்கிறது;  தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே என போதித்த போதி தர்மன் புரட்சித் தலைவர் வழி நடப்போம்" என்பன போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. 

நமது அம்மா நாளிதழில் இடம்பெற்ற கவிதை: 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே புதுச்சேரி சேர்த்து மொத்தமுள்ள 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close