பொதுவெளியில் பேசாதீங்க... அதிமுக தொண்டர்களுக்கு அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 05:04 pm
do-not-speak-in-public-the-instruction-volunteers-admk

அதிமுகவின் நிர்வாக முறை பற்றியோ, முடிவுகள் பற்றியோ பொதுவெளியில் பேச வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அதிமுக அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது. கட்சி  நிர்வாக முறைகள், தேர்தல் முடிவுகள் பற்றியோ, கட்சி குறித்த தங்கள் பார்வைகள் பற்றியோ கருத்துக் கூறக்கூடாது. அதிமுகவின் செயல்பாடு பற்றி சிலர் வெளியிட்டு வரும் கருத்துகள் வரவேற்கத்தக்கவையாக இல்லை. அதிமுக மீதான அன்பு, பற்று அடிப்படையில் இத்தகைய கருத்துகளை கூறிவருகின்றனர் என்பதை மறுக்க முடியாது.

அதேசமயம் அவர்கள் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டும். ஊர் இரண்டுபட்டால் யாருக்கும் கொண்டாட்டம் என்பதை எல்லோரும் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். முதல்வர் பதவியில் அமர  நினைப்பவர்களுக்கு நம்முடைய சொல்லும், செயலும் உதவிசெய்திடும் வகையில் நடந்திட வேண்டாம். ஜெயலலிதா வழிகாட்டுதலில் செயல்பட்டதை போன்றே தொடர்ந்து பணியாற்ற அன்புடன் அழைக்கிறோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி  நடப்பவை  நல்லவையாக இருக்கட்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close