மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்!

  அனிதா   | Last Modified : 11 Jun, 2019 03:51 pm
former-minister-joined-the-aiadmk

அமமுக கட்சியில் டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தார். 

கடந்த 2001ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் இன்பத்தமிழன். அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக அமைச்சரவையில் அவருக்கு வாய்ப்பளித்தார். பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த இன்பத்தமிழன் மீண்டும் கடந்த 2009ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தினகரன் புதிய கட்சியை தொடங்கிய போது, இன்பத்தமிழன் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்தார். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமியை சென்னை பசுமை வழி சாலை இல்லத்தில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இன்று இணைந்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close