அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 12:56 pm
5-resolutions-taken-in-admk-meeting

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுகவின் ஆலோசனைக்கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆகியோரது தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏக்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:-

1. மக்களவைத் பொதுத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. 

2. தேர்தலில் வெற்றிபெற உழைத்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி. 

3.மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த நிலையில் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அளித்ததற்கு அதிமுக தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது. 

4. உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றி மிகப்பெரிய வெற்றியை பெற சூளுரை;

5. தன்னிகரில்லா மக்கள் இயக்கமான அதிமுக தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலப் பணியாற்றிட வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close